Saturday 19 March, 2011

Love Life



Tak chances!
Tel d truth!
Learn 2 Say NO!
Spend ur money on things u luv!
Say I Luv U 2 sum1 in life!
Feel d true luv!
Sing out loud!
Share somebody's pain!
Apologize!
Laugh wen u fall!
Tel som1 hw much dey mean 2 u!
Tel d idiot hw he/she hurt u!
Sit alon, watch d rain!
Laugh til ur stomach pains!
Dance even if u r bad at it!
Pose stupidly 4 photos!
Giv sum1 a hug wen dey need!
Be naughty lik child!
Liv it, luv it!

Friday 25 February, 2011

ரசித்த ஒரு கவிதை ... நீங்களும் ரசியுங்கள்...!!!

ரசித்த ஒரு கவிதை ... நீங்களும் ரசியுங்கள்...!!!

தமிழ் மொழி


தடுக்கி விழுந்தால்
மட்டும் அ...ஆ...


சிரிக்கும்போது
மட்டும் இ..ஈ..


சூடு பட்டால்
மட்டும் உ...ஊ..


அதட்டும்போது
மட்டும் எ..ஏ...


ஐயத்தின்போது
மட்டும் ஐ...


ஆச்சரியத்தின்போது
மட்டும் ஒ...ஓ...


வக்கணையின் போது
மட்டும் ஒள...


விக்கலின்போது
மட்டும் ...?

என்று தமிழ் பேசி
மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழியென்று !!!

Sunday 8 August, 2010

படம் சொல்லும் கதை

















ஐயோ !! School விட்டு போய் பூ விக்கணும்.
7 மணிக்கி பாத்ரம் விலக்கி வைக்கணும்.
9 மணிக்கி அப்பா குடிச்டு வீட்டுக்கு வர்தோ தெரு முனைல விழுந்து கடைக்கோ தேட போணும்.
எப்போ Homework பண்றது நாளைக்கும் அடி தான் வாங்கணும் ..


















வேடிக்கை மனிதர்கள் ..
முதல் இரவு நடந்ததா எனக்கு தெரியாதுங்க சத்யமா

















இது தான் "Terror" பாசம்















இது தான் தாய் பாசம்










2000 கிராமம் 2020 கிராமம்




Wednesday 5 May, 2010

என் ஆசையின் கோர்வைகள்...

காலையில் விடிந்ததும் என் விழி திறக்கக் காத்திருக்கும் உன் முகம்...
என் தலையை கோதிக்கொண்டே நீ கொடுக்கும் அந்த முத்தம்...
நீ ஆடை மாற்றுகையில் உதவிக்கரம் என்ற பெயரில் நான் செய்யும் சிலுமிஷங்கள்...


நான் குளிக்கையில் என் கைக்கெட்டும் தூரத்தில் ஆடை இருந்தும் உன்னை எடுத்துத் தரச்சொல்லும் கள்ளத்தனம்...
நீ எனக்கு உணவூட்டுகையில் சுவைக்கும் உன் விரல்கள்...
எனக்கு சட்டை அணிவிக்கையில் உன் கன்னம் வருடும் என் விரல்கள்
நான் பிரிகையில் ஒரு கனம் சேரும் நம் இதழ்கள்...

அலுவலக பணிகளுக்கிடையே அடிக்கடி சிணுங்கும் உன் தொலைப்பேசி அழைப்புகள்...
மதிய உணவின் போது உன் பரிவை நினைவுகூறும் உன் கை மனம்...
உன்னை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில் பணியைம் முடிக்கும் அந்த கடைசி நிமிடம்...
வீட்டிற்க்குள் நுழையும்போது என்னை ஆவலாய் எதிர்நோக்கும் உன் விழிகள்...

என் களைப்பை போக்க நீ கொடுக்கும் உன் இதழ் பட்ட தேனீர்...
சமையலரை ஒத்தாசை என்று சொல்லிவிட்டு உன் இடையை மட்டும் சுற்றிக்கொள்ளும் என் கைகள்...
என் மடியில் அமர்ந்தபடி என் தலைதட்டி நீ கொடுக்கும் இரவு உணவு...
நாம் உறங்குவதர்க்காய் நீ விரித்துவைத்திருக்கும் நெடுநாள் தோழியான உன் போர்வை...

இடம் நிறைய இருந்தும் சங்கினுள் நுழைந்த நத்தை போல் என் கழுத்தில் புதையும் உன் முகம்...
என்னை உறங்க வைப்பதாய் எண்ணி நீ சொல்லிக்கொண்டே உறங்கும் நம் நினைவுகள்...
மணவறையில் நாம் விரல் பிடித்து நடந்ததை மறக்காத உன் ஆழ் தூக்க விரல் பினைப்பு...
என் நெஞ்சை வருடும் உன் மூச்சுக்காற்றை ரசித்துக்கொண்டே இழுக்கும் அந்த தூக்கம்...
நம்மைக் கண்டு பொறாமையில் விரைவாய்விடியும் காலை...

இவைதான் என் ஆசையின் கோர்வைகள்...

Tuesday 23 March, 2010

உறவுகள்...


றவுகள்... இதில்தான் எத்தனை வகை..?


தாய், தந்தை, தாத்தா,பாட்டி, கணவன், மனைவி, மகன், மகள் போன்ற குடும்ப உறவுகள்; வெளியே நண்பர்கள் என சமூக உறவுகள்...


நம் வாழ்க்கைத் தரத்தை தீர்மானிப்பதில், உறவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. உண்மையில் ஒருவருக்கு உதவிகள் தேவைப்படும்போதுதான் உறவுகளின் ஞாபகம் வருகிறது.


ஆனால், எதிப்பார்ப்புகள் நிறைவேறாத போது உறவில் விரிசல் ஏற்படுகிறது.


நம் உறவுகள் நம்மை விட்டு விலக, நம் கோபமும் காரணமாகிவிடுகிறது!


நம் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் போதுதான் கோபம் ஏற்படுகிறது. உறவுகள் நமக்குப் பிடிக்காத காரியம் செய்யும்போது கோபம் வருகிறது. நமக்கு கோபம் வருவது போல உறவினருக்கும் கோபம் வரும் என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை.

சற்றே யோசனை செய்தால் இவை புரியும்!

நம் வீட்டில் வேலை செய்யும் நபர்கள் கூட, தன் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துவதை விரும்புவதில்லை. அதனால் அவர்களையும் நமக்குச் சமமாக, நம்மில் ஒருவராக எண்ணிப் பழகினால் எதிர்ப்பார்த்ததற்கு மேல் பலன்கள் கிட்டும்.

உறவுகள் தொடர... யாரையும் நிர்வகிக்க முயற்சி செய்யாதீர்கள்.

உறவுக்கு ஆதாரம் அன்புதான்.

ஆகவே அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்... வெறுப்பை வெறுத்து ஒதுக்குவோம்.

உறவுப்பூக்கள் மலரும்!

~ நன்றி விகடன்


Saturday 20 February, 2010

பெண்ணல்ல பெண்ணல்ல :)


பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகைப் பூ



சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப் பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தனப் பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ

தென்றலை போல நடப்பவள்
என்னை தழுவ காத்துக்கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்

சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

சித்திரை மாத நிலவு ஒளி
அவள் சில்லெனத் தீண்டும் பனித் துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்லப் பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்லத் திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனைப் பூ முடித்து உலவும் அழகு பூந்தோட்டம் மெத்தையில் நானும் சீராட்டப் பிறந்த மோகனம்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகைப் பூ



Sunday 14 February, 2010

ஆயிரத்தில் ஒருவன் - எனது பார்வை .


First half ஏன் சூப்பர் ... ரீமா சென் , "சரியான கட்டைல காட்சிகள்" . "குளிர் நேர காட்சிகள்", " உன் மேல ஆசை தான் குத்தாட்டம்" ரசிகர்கள் சொல்வது சூப்பர் ....

Second half ஏன் BORE - படத்தில் தமிழ் பேசி நடிதுள்ளர்கள் . அது எப்டி தமிழர்களுக்கு புரியும் . போர் காட்சிகள் . ENGLISH PADAM ல இப்படி வந்தா கை தட்டி பாராட்டுவோம் . தமிழ் படத்துல இப்படியா சி சி BORE. Logica இல்ல .Padam waste.


First half super ... Second half bore ... பெரும்பாலும் எல்லாரும் சொல்லும் கமெண்ட் இது .. குத்து பாட்டு இல்லை , Hero Worship இல்லை . Punch Dialogue இல்லை .
இது நாலா தான் பலருக்கு படம் பிடிக்காம போய்டோ என்னமோ ...

என்னை பொறுத்த வரை இரண்டாம் பாதியில் தான் கதையே ஆரம்பம் .
ஆம் செல்வா இத்தரை படத்தை எடுத்ததே அந்த வரலாற்று தமிழர்களுக்கு ( புலி கொடி தமிழர்கள் ) நடந்த, நடக்கும் கொடுமைகளை பதிவு செய்ய தான் என்று நினைகிறேன் .

இந்திய ராணுவம் தவறு செய்யவதாக (இறுதி காட்சிகளில் பெண்களை மானவங்கம் படுத்துவது ) போன்ற காட்சிகள் தைரியமாக சொல்ல பட்டு இருக்கிறது .1987-1990 களில் என்ன நடந்தது என்று அறிந்தவர்களுக்கு இது புரியும் . புரியாதவர்கள் சரிதரத்தை புரடுங்கள் . ராணுவம் கொத்து குண்டுகளை வீசும் போது பார்த்திபன் " இப்படை களத்தின் பெயர் என்ன . இது குறித்து சொல்லி இருந்தால் அஞ்சி விடுவோம் என்று நினைத்தீரோ " என்று சிரித்து கொண்டே உயிர் விட்டவர்கள் யாரு என்று உங்களுக்கு புரியவில்லையா ????????

Hitler Jews கொன்ற வரலாற்றை அறிந்த தமிழர்கள், தம் சொந்த இனம் தன் கண் முன்னாடியே அழிந்து கொண்டு இருக்கும் ஒரு வரலாறு தான் மறைவாக ( நேரடியாக பதிந்தால் தான் இறையாண்மை பேசி கொண்டு வரிஞ்சி கட்டிட்டு வண்டுருவாங்கலே) பதிவு செய்துள்ளார் செல்வா என்பதை புறிந்து கொள்ளாதது ஏனோ ?

... 2000 துணை நடிகர்கள் 3 வருட உழப்பை ஒரு நிமிடத்தில் உதாசின படுத்தாமல் சற்று சொல்ல பட்ட விசயத்தை புறிந்து கொள்வோம் ...

தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

நெல் ஆடிய நிலம் எங்கே
சொல் ஆடிய அவை எங்கே
வில் ஆடிய களம் எங்கே
கல் ஆடிய சிலை எங்கே

கயல் விளையாடும் வயல் வெளி தேடி
காய்ந்து களித்தன கண்கள்
....
புலி கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலி கறி கொறிபதுவோ
......
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ
......

நொறுங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு அழுகின்ற அரசன்
பழம் தின்னும் கிளியோ
பிணம் தின்னும் கழுகோ
....
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அது வரை தமிழ் காணும் துயரம் கண்டு தலையை சுற்றும் கோலே அழாதே என்றோ ஒரு நாள் விடியும் என்றே இரவை சுமக்கும் நாளே அழாதே

எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ என்னோடழும் யாழே அழாதே

இந்த அழுகை உங்களுக்கு BORE அடிக்குது என்றால் இப்பதிவும் உங்களுக்கு BORE தான்.

== செல்வா ஆயிரத்தில் ஒருவன் குடுத்தும் எம் மக்களுக்கு புரிய வில்லையே. ====

Sunday 4 October, 2009

இதை எல்லாம் நீங்க ரசிச்சதுண்டா ?????????

சிறிய விளம்பர இடைவேளை ன்ன உடனே Channel மத்ரவங்களா நீங்க ? விளம்பரத்ல வர்ற சின்ன சின்ன விசயத்த நோட் பண்ணுங்களேன் சேனல் மாத்தாம... ச்ச எவ்வளவு அழகான ரசனைய விட்டிட்டு mega seriallaye மூழ்கி இருகோம்னு தெரியும் !!!!!!!!!!

எனக்கு தெரிஞ்ச பல பேர் எதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இடைவேளையின் போது ரொம்ப சலித்துக்கொள்வார்கள் " இப்படி விளம்பரமா போட்டு கொல்றானே " என்று... ஆனா நீங்க நல்லா கவனிச்சு பாத்தீங்க நா தெரியும் சில விளம்பரங்கள் நீங்க பார்க்கும் நிகழ்ச்சியை விட சுவாரசியமாய் இருக்கும்..உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால்...

1) கரை நல்லது விளம்பரம் :
தன் தங்கையை கீழே விழ வைத்ததற்காக சேறு கூட சண்டை போடும் சிறுவன்.

2) இன்று இறந்து போன செல்லப்ப்ரானியின் நினைவில் இருக்கும் ஆசிரையிடம் நாய் போல் பாவனை செய்து மகிழ்வூட்டும் சிறுவன்.


3) என் தம்பிக்கி கல்யாணம்னு சந்தோசமா எல்லார்கிட்டயும் போன் செஞ்சி சொல்லும் Prakash raj Vodafone விளம்பரம் ......

4) இன்னொரு கைலயும் அடிங்க அடுத்த பால் லையும் சிக்ஸர் அடிப்பேன்" என்று நம்பிக்கையோட சொல்ற பையன்....

5) தன்னுடைய உண்டியலை வங்கிக்கு பத்திரமாக எடுத்துசெல்லும் சிறுவன்.

6) மழை பெய்யும் . ஒரு பொண்ணு தனியா காதித கப்பல மூழ்க விடாம கை வச்சி மழை அது மேல படாம பாத்துக்கும்... then நண்பர்கள் 5 பேரு சேந்து மூழ்கிவிடாம தடுபாங்க !!! எவ்ளோ அழகான Airtel special 5 Add.

7) உலகத்துல மிக நீளமான பாலத்த என்னால கட்ட முடியும்னா அத என்னால தொறந்து வைக்கவும் முடியும்னு சொல்ற Engineeer ....

8) இன்னும் ரெண்டு சக்கரம் தான் வித்யாசம் uncle இன்னும் கொஞ்ச நாள்ல அதுவும் வந்துடும் னு சொல்லிட்டு cycle a போற பையன் .....
இன்னும் நிறைய


.....இந்த மாதிரி சின்ன சின்ன விசயத்தையும் ரசிச்சி பாருங்களேன் :):):):)

Friday 4 September, 2009

யார் இவர்கள்??


சொரனையே இல்லாத காட்டெருமை நாங்கள்.

ஓட்டு போட மட்டுமே படிக்க வைக்கப்பட்ட பதுமை நாங்கள்.
ஏமாந்தாலும், ஏமாற்றினாலும் புரிந்துகொள்ளாத புழுவினம் நாங்கள் தான்.
சலுகைகளுக்கு சல்யூட் அடிப்பதே எங்கள் கடமை.
லட்டி கம்புக்கு பயப்படுவதே எங்கள் கண்ணியம்.
அரசியலை படிப்பதோடு மட்டுமே எங்கள் கட்டுப்பாடு.
கூத்தாடிகளுக்கு கை தட்டுவதே எங்கள் பிறவி பயன்.
ஈழம் என்று படம் வந்தால் பாற்போம்,
நாலு சண்டையும் ஐந்து குத்து பாட்டும் இருந்தால் அமோக வெற்றி பெற செய்வோம்.
அதில் ஹீரோவாய் வந்தவனுக்கு உயிரையும் கொடுப்போம்.

தொப்புள் கோடி உறவாவது, தூர தேச தமிழனாவது.
அம்மா, மனைவி தாலி கூட அடகு வைக்கும் வீரம் எமக்கு
என்ன நடந்தாலும் மறக்கடித்துக் கொள்ள டாஸ்மாக்.
இனி யார் யாரோடு சேர்ந்தால் என்ன?
என்ன என்ன உளறினாலும் என்ன?
நான் உளற கட்டிங் கிடைத்தால் போதும்.
வாங்கி கொடுப்பவருக்கு என் வாக்கு மட்டுமல்ல,வாழ்க்கையும் தர தயார்!

~ இப்படிக்கி யார் இவர்கள் என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனும்னு அவசியம் இல்ல உங்கள் மனசாட்சி பதில் சொல்லட்டும் ..