Sunday, 4 October 2009

இதை எல்லாம் நீங்க ரசிச்சதுண்டா ?????????

சிறிய விளம்பர இடைவேளை ன்ன உடனே Channel மத்ரவங்களா நீங்க ? விளம்பரத்ல வர்ற சின்ன சின்ன விசயத்த நோட் பண்ணுங்களேன் சேனல் மாத்தாம... ச்ச எவ்வளவு அழகான ரசனைய விட்டிட்டு mega seriallaye மூழ்கி இருகோம்னு தெரியும் !!!!!!!!!!

எனக்கு தெரிஞ்ச பல பேர் எதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இடைவேளையின் போது ரொம்ப சலித்துக்கொள்வார்கள் " இப்படி விளம்பரமா போட்டு கொல்றானே " என்று... ஆனா நீங்க நல்லா கவனிச்சு பாத்தீங்க நா தெரியும் சில விளம்பரங்கள் நீங்க பார்க்கும் நிகழ்ச்சியை விட சுவாரசியமாய் இருக்கும்..உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால்...

1) கரை நல்லது விளம்பரம் :
தன் தங்கையை கீழே விழ வைத்ததற்காக சேறு கூட சண்டை போடும் சிறுவன்.

2) இன்று இறந்து போன செல்லப்ப்ரானியின் நினைவில் இருக்கும் ஆசிரையிடம் நாய் போல் பாவனை செய்து மகிழ்வூட்டும் சிறுவன்.


3) என் தம்பிக்கி கல்யாணம்னு சந்தோசமா எல்லார்கிட்டயும் போன் செஞ்சி சொல்லும் Prakash raj Vodafone விளம்பரம் ......

4) இன்னொரு கைலயும் அடிங்க அடுத்த பால் லையும் சிக்ஸர் அடிப்பேன்" என்று நம்பிக்கையோட சொல்ற பையன்....

5) தன்னுடைய உண்டியலை வங்கிக்கு பத்திரமாக எடுத்துசெல்லும் சிறுவன்.

6) மழை பெய்யும் . ஒரு பொண்ணு தனியா காதித கப்பல மூழ்க விடாம கை வச்சி மழை அது மேல படாம பாத்துக்கும்... then நண்பர்கள் 5 பேரு சேந்து மூழ்கிவிடாம தடுபாங்க !!! எவ்ளோ அழகான Airtel special 5 Add.

7) உலகத்துல மிக நீளமான பாலத்த என்னால கட்ட முடியும்னா அத என்னால தொறந்து வைக்கவும் முடியும்னு சொல்ற Engineeer ....

8) இன்னும் ரெண்டு சக்கரம் தான் வித்யாசம் uncle இன்னும் கொஞ்ச நாள்ல அதுவும் வந்துடும் னு சொல்லிட்டு cycle a போற பையன் .....
இன்னும் நிறைய


.....இந்த மாதிரி சின்ன சின்ன விசயத்தையும் ரசிச்சி பாருங்களேன் :):):):)

Friday, 4 September 2009

யார் இவர்கள்??


சொரனையே இல்லாத காட்டெருமை நாங்கள்.

ஓட்டு போட மட்டுமே படிக்க வைக்கப்பட்ட பதுமை நாங்கள்.
ஏமாந்தாலும், ஏமாற்றினாலும் புரிந்துகொள்ளாத புழுவினம் நாங்கள் தான்.
சலுகைகளுக்கு சல்யூட் அடிப்பதே எங்கள் கடமை.
லட்டி கம்புக்கு பயப்படுவதே எங்கள் கண்ணியம்.
அரசியலை படிப்பதோடு மட்டுமே எங்கள் கட்டுப்பாடு.
கூத்தாடிகளுக்கு கை தட்டுவதே எங்கள் பிறவி பயன்.
ஈழம் என்று படம் வந்தால் பாற்போம்,
நாலு சண்டையும் ஐந்து குத்து பாட்டும் இருந்தால் அமோக வெற்றி பெற செய்வோம்.
அதில் ஹீரோவாய் வந்தவனுக்கு உயிரையும் கொடுப்போம்.

தொப்புள் கோடி உறவாவது, தூர தேச தமிழனாவது.
அம்மா, மனைவி தாலி கூட அடகு வைக்கும் வீரம் எமக்கு
என்ன நடந்தாலும் மறக்கடித்துக் கொள்ள டாஸ்மாக்.
இனி யார் யாரோடு சேர்ந்தால் என்ன?
என்ன என்ன உளறினாலும் என்ன?
நான் உளற கட்டிங் கிடைத்தால் போதும்.
வாங்கி கொடுப்பவருக்கு என் வாக்கு மட்டுமல்ல,வாழ்க்கையும் தர தயார்!

~ இப்படிக்கி யார் இவர்கள் என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனும்னு அவசியம் இல்ல உங்கள் மனசாட்சி பதில் சொல்லட்டும் ..

Sunday, 9 August 2009

காக்கைக்கு தெரிஞ்ச உண்மை ..


யாருபா சொன்னா அண்ணாதுரை நாத்திகவாதி னு ....இல்லைங்குது காக்கா அதோட எச்சத்தால் அண்ணாவுக்கு போட்ட நாமம் !!!!!!!!!!!
------அய்யா கறை வேட்டிங்கலே மொதல்ல இந்த கறைய தொடைங்க ------------

ஆகா என்ன நட்பு !!!!!




"காக்கா கதை"

ஒரு மரத்தில காக்கா வெட்டியா உட்கார்ந்து இருந்துச்சாம். அங்க வந்த முயலு கீழருந்துகிட்டு"ஏன் காக்கா வெட்டியா உட்கார்ந்திருக்கே. வேற எதுவும் வேலை இல்லையா"ன்னு கேட்டுச்சாம்.

அதுக்கு காக்கா "அதெல்லாம் இருக்குது, நான் சும்மா தான் உட்கார்ந்திட்டிருக்கேன். நீ உன் வேலைய பாரு"ன்சாம். உடனே முயலும் ரோஷமாகி "நானும் வெட்டியா இப்படி தான் உட்காருவேன்"னு சொல்லிட்டு மரத்துக்கு கீழ சும்மாவே உட்கார்ந்துச்சாம்.
அந்த நேரம் பார்த்து அங்க வந்த வேட்டைக்காரன் முயல் ஓடாம சும்மா உட்கார்ந்திருந்ததைப் பார்த்துட்டு ஈஸியா புடிச்சுட்டு போயிட்டானாம்.

ss1

moral of the stroy: மக்கா உனக்கு மேல இருக்குற டேமேஜர் வேலையே செய்யலனாலும் பிரச்சனை இல்ல....நீ உன் வேலையை செஞ்சே ஆகனும்டா மக்கா...

சிரிக்கலாம் வாங்க :)

---------------------------------------------------------------------------------------

செக்யூரிட்டி வேலை கேக்கறியே... உனக்கு என்ன தகுதி இருக்கு..?"

"சின்ன சத்தம் கேட்டாகூட உடனே முழிச்சுப்பேன் சார்!"

---------------------------------------------------------------------------------------

எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் 'மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.


---------------------------------------------------------------------------------------

டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,

எப்டி எப்டி விளையாடுவார்?

கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ...........

---------------------------------------------------------------------------------------

டீச்சர் : மனுஷனா பொறந்தா எதாவது சாதிக்கணும்.

நம்ம பய: நல்ல வேல, ,, நான் குழந்தையா தான் பொறந்தேன்
டீச்சர் ...???

---------------------------------------------------------------------------------------

மகன்: "கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?"

அப்பா: "தெரியலப்பா... இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!

---------------------------------------------------------------------------------------

சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டுக்குப் பின்னாடி குடிச்சிட்டேன்!

அடடா... அப்புறம்?

மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு!


---------------------------------------------------------------------------------------

டாக்டர் : கர்ப்பமா இருக்கும்போது மெகா சீரியல் பாக்காதீங்கன்னு சொன்னேனே. . . கேட்டீங்களா?

பெண் : ஏன் டாக்டர் என்ன ஆச்சு!

டாக்டர் : பொறந்த உடனேயே உங்க குழந்தை, என் அம்மா வயித்த கிழிச்ச உன்னை பழிக்குப் பழி வாங்காம விடமாட்டேன்னு சொல்லுது

---------------------------------------------------------------------------------------

சிரிக்கவும்/சிந்திக்கவும்.

ஆபிரகாம் லிங்கன் அவருடைய ஷீவிற்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கே வந்த ஒருவர், "சார், உங்கள் ஷீவிற்கு நீங்களேதான் பாலீஷ் போடுவீர்களா?" என்று கேட்டார்.

லிங்கன், " ஆமாம். நீங்கள் யார் ஷீவிற்குப் பாலீஷ் போடுவது வழக்கம்? " என்று திருப்பிக் கேட்டார்.

---------------------------------------------------------------------------------------

கச்சதீவு கடல் பகுதியில் பழுதாகி நின்ற படகை கயிற்றினால் கட்டி இழுக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தபோது ஹோவர் கிராப்ட் கப்பலில் அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர் பழுதாகி நின்ற படகை பார்வையிட்டனர். இந்நேரத்தில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள், ஹோவர் கிராப்ட் கப்பலை நோக்கி வேகமாக வந்தன. கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் இருந்த இந்திய கடலோர காவல்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் கைகளை தூக்கியபடி நின்றனர் - உண்மை செய்தி
.......................................................................................

இலங்கை ராணுவம்கேப்டன்: ஐயா நான் உங்கள அடிச்சிருக்கனே....
இந்திய கடலோர காவல்படை:எப்பம்மா ?
இலங்கை ராணுவம் -நல்லா யோசிச்சு பாருங்க !!!!!!!
இந்திய கடலோர காவல்படை- பாகிஸ்தான் பாடர்ல சும்மா குக்கு கும்முன்னு கும்மினிங்களே அந்த குருப்பா ?
இலங்கை ராணுவம் -இல்லய்யா
இந்திய கடலோர காவல்படை- அந்த சீனா கடல் பகுதியிலவச்சு பின்னு பின்னுன்னு பின்னி எடுத்திங்களே அந்த குருப்பா ?
இலங்கை ராணுவம் -இல்ல கேப்டன் ஐயா..
இந்திய கடலோர காவல்படை- எந்த குருப்பா இருக்கும் ,ஒண்ணுரெண்டு எடத்துல வாங்கிருந்தா பரவாஇல்ல நம்மதான் போர எடம் எல்லாம் வாங்கிருக்கமே .டேய் அந்த கச்ச தீவு பக்கம் மூத்திர சந்து மாதிரி இடத்துல சும்மா கொதரி தள்ளினீங்களே அந்த குருப்தானே
இலங்கை ராணுவம் -ஆமா கேப்டன் ஐயா.
இந்திய கடலோர காவல்படை-ஒங்ககிட்ட ஒத வாங்கினதுகப்புரம் எவன் அடிச்சாலும் தாங்குர சக்தி வந்துச்சி...
இலங்கை ராணுவம் -அது இல்ல கேப்டன் இவ்வள்வு அடிய வாங்கிகிட்டு எப்பிடி உயிரோடி இருக்கிங்க ?
இந்திய கடலோர காவல்படை- அதனாலதானெட எங்கள ரெம்ப நல்லவன்னு சொல்லுராங்க
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

bush அடாவடிகளை பார்த்து ஆத்திரப்பட்ட ஒருவர் தந்தி அடித்தாராம் நீங்கள் எல்லாம் நரகத்திற்கு தான் போவீர்கள் அங்கே உங்களை எண்ணை சட்டியில் போட்டு வறுத்து எடுபார்கள் என்று.

தந்தியை படித்ததும் உடனடியாக தன் உதவியாளரை அழைத்தார் புஷ் "நரகம் என்றால் என்ன?" என்றார். "அங்கு எண்ணை சட்டியில் வறுத்து எடுபார்கள் என்பது உண்மையா?" என்று புஷ் கேட்க "ஆமாம், அது ஒரு மத நம்பிக்கை " என்றார்.உடனே புஷ் சொன்னாரம் "உலகத்தில் பாவம் செய்பவர்கள் தான் அதிகம். இத்தனை பேரையும் போட்டு வருதெடுகிற அளவு எண்ணை இருக்கிறது என்றால், ஒ! மை காட்,நாம் ஏன் ஈராக் மீது போர் தொடுக்க வேண்டும்? நியாயமாக பார்த்தால் நரகத்தை அல்லவா கைப்பற்றி இருக்க வேண்டும் ?"

Saturday, 30 May 2009

நம்ம சென்னை ல 2 வருஷம்

30-05-2007 அன்னைக்கி சென்னை கத்தி பாரா ல காலை ல 7 மணிக்கி இறங்கினேன். எழுதாப்ள Lee Royal Meridian.வாய போலந்து கொஞ்ச நேரம் பாத்துட்டு இருந்தேன் . உடனே சுத்தி 6 7 ஆட்டோ அண்ணன்ஸ். எங்க சார் போகணும்னு . Race course போகணும் அண்ணேன். 1 km தான் இருக்கும் . வழக்கம் போல் சுத்தி கூட்டிட்டு போய் வழில என்னபோல இளிச்ச வாயேன் ஒருத்தன் மாட்னான் . ஆக மொத்தம் ஆளுக்கு 60 ரூபா னு 120 ரூபா . சென்னை ல 1 Km வர 120 ரூபாவா. ?? ஆட்டோ ஸ்டேஷன் வழியா போகும்போது Electric Train பாத்தேன். என்னடா இது !!! டவுன் பஸ்ல தொங்கற மாதிரி ரயில்ல தொங்கிட்டே போறனுங்க னு நினச்சிட்டே இந்த பக்கம் திரும்பினா 9M பஸ்சு. 100 பேறு 1 பஸ்ல போகலாம்னு அன்னிக்கி தான் தெரிஞ்சிச்சி,,,,

 

2 நாளைக்கி முன்னாடி தான் மொழி படம் பாத்து இருந்தேன். அதுல வர்ற flats மாதிரி சென்னை ல தங்க போறோம்னு நினச்சி ரூம் முன்னாடி இறங்கினேன். மொத்தம் 10 ரூம் . 2 ஆவது மாடிகி Manager னு ஒருத்தன் அங்க கூட்டிட்டு போனான்.

 

தீ பெட்டி மாதிரி 1 ரூமு. அதுல 3 பேரு . ஆளுக்கு 1000 ரூபா !!!! இந்த ரூமுக்கு தான் Manager போன்ல அவ்ளோ build up கொடுத்தானா னு நினச்சேன் . ஊர்ல வீட்ட சுத்தி தோட்டம் 2BH 1000 ரூபா தான் .  பக்கத்துலயே Super மெஸ் இருக்கு னு காட்னா . மெஸ் லட்சணமோ Supero Super.

 

மொத நாளு கம்பனிக்கு 7 1/2 மணி பஸ்சுக்கு 7 மணிக்கே stop புக்கு போயாச்சி .. கிண்டி பஸ் stop ல நிக்கேன் . மொத தடவ ரெட்டை மாடி பஸ் ... வானத்துல ரொம்ப பக்கத்துல kingfisher aeroplanu . அடேங்கப்பா !!! டேய் ரவி வானத்த பாக்காதடா வெளியூர் காரேன்னு கண்டு பிடிசிருவானுங்க நினச்சி தலைய குனிஞ்சேன் .

 

கப்பல் மாதிரி கம்பெனி பஸ் வந்துச்சி .. உள்ள ஏறுனேன் ... சில்லுனு இருந்திச்சி ..பாத்தா AC Bus. எல்லாரும் உள்ள தூங்கிட்டு இருந்தாங்க . என்னடா காலங்காத்தால எல்லாரும் தூங்குறாங்க நினச்சிட்டே உள்ள பொய் ஒரு seat ல உக்காந்தேன். Colleguku conductorta திட்டு வங்கிடே வாச படில உக்காந்து போவயேடா இப்போ AC Bussu mmmmmm ஜமாய் !!!!

 

வழில அண்ணா University .. HCL 15 மாடி கட்டடம் . ஊர்ல 5 மாடி Janakiram hotellayae பெருசுன்னு நினைச்சோம் . இங்க 15 மாடியா????????? TCS, CTS, WIPRO, SATYAM இன்னும் பல கம்பெனி, ஆனா ஒன்னு மட்டும் புரியல!!! ஏன் எல்லாரும் தூங்கிட்டே போறாங்கனு !!! (இப்போ ரொம்ப நல்லா புரிஞ்சிட்டு)...

 

week end வந்தாச்சி....போனோம் Marina ... என் frienduku ஒரு doubt வந்துச்சி . மாப்ள இந்த ஊர்ல ஏன்டா எல்லா பொண்ணுங்களும் ஷால் ல முஞ்ச மூடிட்டு போறாங்க !!! இல்லனா கழுத்துல மட்டும் போடறாங்க நு கேட்டான் ??? மாப்ள நமக்கு எதுக்குடா வம்பு !!! நாமே இத யார்டயாவது கேட்டா உன் பார்வை தப்பு ன்னு வாங்க !!!! அவங்க எப்படியும் போட்டும்..நம்ம வேலைய பாப்பும் மாப்ள னுட்டு beach சுத்திட்டு வந்தாச்சி !!!


மொத மாசம் சம்பளம் 7289 ரூபா !!!! அன்னிக்கி officla லேடா தான் விட்டாங்க !!! நைட் 10 மணிக்கி நேரா TNagr Pothys போனோம்.கடை கிட்ட தட்ட பூட்டி யாச்சி.. அப்பாக்கு ஒரு சட்டை , அம்மாக்கு ஒரு சேலை , தாதா கு ஒரு வேட்டி ஆச்சி கு ஒரு சேலை ன்னு வாங்கிட்டு friendsuku ஒரு குட்டி treat. உழச்ச காசு கைக்கு வந்து எல்லாருக்கும் எதாவது வங்கி கொடுக்கிற அந்த நிமிஷம் அடைஞ்ச சந்தோசம் :) :) :) .... உலகத்தையே வாங்கிட்ட சந்தோசம் இந்த சென்னை ல தான் கிடைச்சது ...

 

இதே சென்னை ல தான் என் friendoda N-70 பஸ்ல போகும்போது ஆட்டைய போட்டானுங்க !!! வீட்ல வெளில இருந்த என் canvas , T-shirt - வீட்டு பூட்டு எல்லாம் அபேஸ் பண்ணானுங்க !! Traffic policu atleast 10 ரூபா வது கொடுத்துட்டு வண்டி எடுத்துட்டு போடா ன்னு சொன்னப்ப !! அப்பெல்லாம் என்னடா ஊருன்னு தோணிச்சி !!!


கண் தெரியாதவங்க கூட ரிமோட் கவர் , ரேஷன் கவர் ன்னு வித்து வைத்த கழுவறது இந்த ஊர்ல தான் . கடா மாடு மாதிரி இருந்தும் pick pocket, திருட்டு ன்னு வாழ்கை நடத்துறதும் இந்த ஊர்ல தான்.

 

toilet la கூட டிவி இருக்குற satyam theatre (Busya piss அடிக்கிற நேரத்துல எடுகுடா TV).

காஞ்ச ரொட்டில ஜாம் தடவி தர்ற Pizza Corner (Kadalai corner),

அவுத்து உட்ட கழுதைங்க ஜோடியா romance பண்ணும் Marina Beach, Besant Ngr Beach, Gandhi mandabam, Children's (உருவாகிற)  Park ..

500 ரூபா பொருள கூட 5000 ரூபான்னு விக்கிற City centre, Spencer etc..

50 ரூபா பொருள 500 ரூபா கொடுத்து வாங்கினா தான் மதிப்பு ன்னு நினைக்கிற மக்கள்!!!

 

100 ரூபாவா சம்பாதிச்சிட்டு 70 ரூபாவ TASMAC கே கதின்னு கிடகிரவங்க. ஊத்தி கொடுக்கும் அரசாங்கம் இருக்கும் கோட்டை !!!

ஒவ்வரு கலர் போர்டுக்கும் ஒவ்வரு ratela டிக்கெட் .

25 ரூபாக்கு unlimited சாப்பாடு போடும் Andra Mess. (வாழ்க)

தாங்களே தெய்வம் தாங்க வச்சது தான் சட்டம்னு நினைக்கும் வீட்டு owners. ஒரு unit currentuku 4, 6 ரூபா வாங்கும் high class பிச்சை காரங்க !!!!

100 % ozonated pure drinking water nu கிழிஞ்சி தொங்கும் label ஓட்டுன வாட்டர் கேன்ஸ் .

சென்னையின் நரம்பான electric train, Share auto,

 

இது எல்லாம் எங்கள் சென்னையின் சொத்து ........

உந்தன் தேசத்தின் குரல்

Saturday, 23 May 2009

எங்களை மன்னிக்கட்டும்.


எதற்கும் அழவில்லை,
எதை நினைத்தும் வெட்கமில்லை
உதிர சொந்தமெல்லாம் உயிரற்று மடிகிறது
பச்சைப் பிள்ளையை பசி தின்று பசியாறுகிறது
கண்ணீரும் இரத்தமும் இந்து மஹா சமுத்திரத்தின் இன்னொரு துணை நதியாய் போகிறது.
படை திரட்டி போர் பரணி பாடிய எம் குல தெய்வம் பதுங்கி எங்கோ வாழ்கிறது
துரோகமும் குரோதமும் செழித்து எங்கும் படருது
எதற்கும் அழவில்லை,எதை நினைத்தும் வெட்கமில்லை
இத்தனை கொடுமைகளை தெரிந்தும் படித்தும் ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கிறோமே
இந்த கொடுமை எண்ணி தான் நெஞ்சு வெடித்து கிடக்கிறோம்;
நிஜமாகவே ராஜராஜ சோழனும் ராஜேந்திரனும்அவர்களின் புலிக்கொடியும் எங்களை மன்னிக்கட்டும்.

நீங்கள் எங்களை மன்னித்தாலும் வரலாறு எங்களை மன்னிக்காது.