



ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
2 நாளைக்கி முன்னாடி தான் மொழி படம் பாத்து இருந்தேன். அதுல வர்ற flats மாதிரி சென்னை ல தங்க போறோம்னு நினச்சி ரூம் முன்னாடி இறங்கினேன். மொத்தம் 10 ரூம் . 2 ஆவது மாடிகி Manager னு ஒருத்தன் அங்க கூட்டிட்டு போனான்.
தீ பெட்டி மாதிரி 1 ரூமு. அதுல 3 பேரு . ஆளுக்கு 1000 ரூபா !!!! இந்த ரூமுக்கு தான் Manager போன்ல அவ்ளோ build up கொடுத்தானா னு நினச்சேன் . ஊர்ல வீட்ட சுத்தி தோட்டம் 2BH 1000 ரூபா தான் . பக்கத்துலயே Super மெஸ் இருக்கு னு காட்னா . மெஸ் லட்சணமோ Supero Super.
மொத நாளு கம்பனிக்கு 7 1/2 மணி பஸ்சுக்கு 7 மணிக்கே stop புக்கு போயாச்சி .. கிண்டி பஸ் stop ல நிக்கேன் . மொத தடவ ரெட்டை மாடி பஸ் ... வானத்துல ரொம்ப பக்கத்துல kingfisher aeroplanu . அடேங்கப்பா !!! டேய் ரவி வானத்த பாக்காதடா வெளியூர் காரேன்னு கண்டு பிடிசிருவானுங்க நினச்சி தலைய குனிஞ்சேன் .
கப்பல் மாதிரி கம்பெனி பஸ் வந்துச்சி .. உள்ள ஏறுனேன் ... சில்லுனு இருந்திச்சி ..பாத்தா AC Bus. எல்லாரும் உள்ள தூங்கிட்டு இருந்தாங்க . என்னடா காலங்காத்தால எல்லாரும் தூங்குறாங்க நினச்சிட்டே உள்ள பொய் ஒரு seat ல உக்காந்தேன். Colleguku conductorta திட்டு வங்கிடே வாச படில உக்காந்து போவயேடா இப்போ AC Bussu mmmmmm ஜமாய் !!!!
வழில அண்ணா University .. HCL 15 மாடி கட்டடம் . ஊர்ல 5 மாடி Janakiram hotellayae பெருசுன்னு நினைச்சோம் . இங்க 15 மாடியா????????? TCS, CTS, WIPRO, SATYAM இன்னும் பல கம்பெனி, ஆனா ஒன்னு மட்டும் புரியல!!! ஏன் எல்லாரும் தூங்கிட்டே போறாங்கனு !!! (இப்போ ரொம்ப நல்லா புரிஞ்சிட்டு)...
week end வந்தாச்சி....போனோம்
மொத மாசம் சம்பளம் 7289 ரூபா !!!! அன்னிக்கி officla லேடா தான் விட்டாங்க !!! நைட் 10 மணிக்கி நேரா TNagr Pothys போனோம்.கடை கிட்ட தட்ட பூட்டி யாச்சி.. அப்பாக்கு ஒரு சட்டை , அம்மாக்கு ஒரு சேலை , தாதா கு ஒரு வேட்டி ஆச்சி கு ஒரு சேலை ன்னு வாங்கிட்டு friendsuku ஒரு குட்டி treat. உழச்ச காசு கைக்கு வந்து எல்லாருக்கும் எதாவது வங்கி கொடுக்கிற அந்த நிமிஷம் அடைஞ்ச சந்தோசம் :) :) :) .... உலகத்தையே வாங்கிட்ட சந்தோசம் இந்த சென்னை ல தான் கிடைச்சது ...
இதே சென்னை ல தான் என் friendoda N-70 பஸ்ல போகும்போது ஆட்டைய போட்டானுங்க !!! வீட்ல வெளில இருந்த என் canvas , T-shirt - வீட்டு பூட்டு எல்லாம் அபேஸ் பண்ணானுங்க !! Traffic policu atleast 10 ரூபா வது கொடுத்துட்டு வண்டி எடுத்துட்டு போடா ன்னு சொன்னப்ப !! அப்பெல்லாம் என்னடா ஊருன்னு தோணிச்சி !!!
கண் தெரியாதவங்க கூட ரிமோட் கவர் , ரேஷன் கவர் ன்னு வித்து வைத்த கழுவறது இந்த ஊர்ல தான் . கடா மாடு மாதிரி இருந்தும் pick pocket, திருட்டு ன்னு வாழ்கை நடத்துறதும் இந்த ஊர்ல தான்.
toilet la கூட டிவி இருக்குற satyam theatre (Busya piss அடிக்கிற நேரத்துல எடுகுடா TV).
காஞ்ச ரொட்டில ஜாம் தடவி தர்ற Pizza Corner (Kadalai corner),
அவுத்து உட்ட கழுதைங்க ஜோடியா romance பண்ணும் Marina Beach, Besant Ngr Beach, Gandhi mandabam, Children's (உருவாகிற) Park ..
500 ரூபா பொருள கூட 5000 ரூபான்னு விக்கிற City centre, Spencer etc..
50 ரூபா பொருள 500 ரூபா கொடுத்து வாங்கினா தான் மதிப்பு ன்னு நினைக்கிற மக்கள்!!!
100 ரூபாவா சம்பாதிச்சிட்டு 70 ரூபாவ TASMAC கே கதின்னு கிடகிரவங்க. ஊத்தி கொடுக்கும் அரசாங்கம் இருக்கும் கோட்டை !!!
ஒவ்வரு கலர் போர்டுக்கும் ஒவ்வரு ratela டிக்கெட் .
25 ரூபாக்கு unlimited சாப்பாடு போடும் Andra Mess. (வாழ்க)
தாங்களே தெய்வம் தாங்க வச்சது தான் சட்டம்னு நினைக்கும் வீட்டு owners. ஒரு unit currentuku 4, 6 ரூபா வாங்கும் high class பிச்சை காரங்க !!!!
100 % ozonated pure drinking water nu கிழிஞ்சி தொங்கும் label ஓட்டுன வாட்டர் கேன்ஸ் .
சென்னையின் நரம்பான electric train, Share auto,
இது எல்லாம் எங்கள் சென்னையின் சொத்து ........
இது "குமுதம்" பத்திரிக்கையில் சுமார்12 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது
----------------------------------------------------------
சுஜாதாவின் 'வயது வந்தவர்களுக்கு' .... உலகில் மிகச்சுலபமான வேலை அறிவுரைப்பது. கஷ்டமான வேலை, கடைப்பிடிப்பது. திருவள்ளுவர் காலத்திருந்து தமிழில் இருக்கும் அறிவுரை நூல்களுக்கு, தமிழ்நாட்டில் இன்று ஒரு அயோக்கியன் கூட இருக்கக்கூடாது. பதினாறிலிருந்து பத்தொன்பது வயது வரைதான் இளைஞர்கள். அதன்பின் அவர்களுக்கு முதிர்ச்சியும் பிடிவாதாமும் வந்து அவர்களை மாற்றுவது கஷ்டம். பதினாறே கொஞ்சம் லேட் தான். அஞ்சு வயசிலேயே ஒரு குழந்தையின் குணாதிசயங்கள் முழுவதும் நிலைத்துவிடுகின்றன என்று மனோதத்துவர்கள் சொல்கிறார்கள். இருந்தும் பதினாறு ப்ளஸ்-யை முயற்சிப்பதில் தப்பில்லை. இந்த அறிவுரைகள் இரு பாலருக்கும் பொது(ஆண்-பெண்) இனி அவை.
1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், எதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது ஒரு நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை ரொம்ப இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.
2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். ஏழுகடல் கடந்து அசுரனின் உசிர் நிலையைக் கேட்க மாட்டார்கள். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படித்தான் இருக்கும்.
3. முன்று மணிக்குத் துவங்கும் மாட்டினி போகாதீர்கள். க்ளாஸ் கட் பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். வெளியே வந்ததும் பங்கி அடித்தாற்போல் இருக்கும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரவத்துக்கு உண்மை சொல்லி விடுவது சுலபம். மாட்டினி போகாமல் இருப்பது அதை விட. கிளர் ஓளி இளமை என்று ஆழ்வார் சொல்லும் இளமை, ஓளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.
4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களை படியுங்கள்.பொது விஷயங்கள் என்றால் கதை சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்றபேரைப் பற்றிக்கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகம் நான் ஒரு நாளைக்கு நாலு பக்கம் தான் படிக்கிறேன். அதுவே வருஷத்துக்கு ஆயிரத்து ஐந்நூறு ஆகிவிடுகிறது.
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள்.சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில். யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் முன்னூறு ரூபாய்க்கு ஸ்னீக்கர்ஸ், சுடிதார் கேட்கு முன்.
6. இந்தப் பத்திரிகையைப் படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வாரப் பத்திரிகை படிக்க வசதியில்லாத கோடிக் கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை பாத்ரூமில் அல்லது படுக்கப்போகு முன் எண்ணிப் பாருங்கள்.
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம், ( உடல்) எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயசில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம். குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்குக் கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரவமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.
8. எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். வெளி விளையாட்டு. கடியாரத்துக்கு சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள் எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாகத் தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காகச் சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். யாரையும் மனத்திலோ உடலிலோ தாக்கத் தோன்றாது.
9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிஷம். டி.வி.யில் அசட்டு நாடகங்கள் எல்லாம் ஓய்ந்து இந்தி ஆரம்பித்து அணைத்திருப்பார்கள். குழந்தைகள் தூங்கியிருக்கும். ஒரு மணி நேரமாவது சுத்தமாகப் பாடப் புத்தகம் படிக்கலாம். படித்த உடனே ஓரு முறை பார்க்காமல் எழுதிவிடுங்கள். ராத்திரி பிறர் வீட்டில் தங்கவே தங்காதீர்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் வினை.
10. படுக்கப் போகும் முன் பத்து மிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும். எதாவது ஓர் அறுவை ஜோக் அல்லது காலேஜில் இன்று நடந்தது. அல்லது நாய்க்குட்டி அல்லது எதிர்வீட்டில் காலாட்டி மாமா. சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான். நன்றி: குமுதம் & தேசிகன்