
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
Saturday, 18 April 2009
Saturday, 11 April 2009
வாசித்த வரிகளில் நேசித்த வரிகள்...
வாங்கினேன்! பிடித்து விட்டார்கள்
கொடுத்தேன்! விட்டுவிட்டார்கள்.
வாழ்க்கை
சலவைச் சட்டைக்குள்
சல்லடை பனியன்.
தோல்வி
விதைக்கும் நேரத்தில் தூங்கியவன் நீ!
அறுவடை நேரத்தில் ஏன் அழுகிறாய்?
கோலம்
கருப்பு வளையல் கையுடன்ஒருத்திவளைந்து, நெளிந்துப்பெருக்கிப்போனாள்,
வாசல் சுத்தமாச்சு.
மனம் குப்பையாச்சு.
சாமி
எங்கள் குடிசையில்அடிக்கடி சாமி ஆடுவாள்அம்மா ஏனோ தெரியவில்லைஅன்றும் இன்றும்குடிசைக்கே வருகிறது சாமிமாடிக்கே போகிறது வரம்
கொலை
ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு...விரியுமுன்பே பறித்துஇனறவனுக்கு அர்ச்சனைசெய்கிறான்நூறாண்டு வாழ்ககை வேண்டிதனக்கு
-காசிஆனந்தன்
மனிதன்
இவன் பசுவின் பாலைக்கறந்தால்பசு பால் தரும் என்கிறான்.காகம் இவன் வடையை எடுத்தால்காகம் வடையை திருடிற்று என்கிறான்இப்படியாக மனிதன்....
கூண்டு
விடுதலை ஆவாரா சிறையில்இருந்து என்கணவர்?சோதிடம கேட்கிறாள்கூண்டுக்கிளியிடம்
யாமிருக்க பயம் ஏன்
ஆறுபடை முருகன் கோவிலுக்கு ஏலு பூட்டு........ ''யாமிருக்க பயம் ஏன்''
படிப்பு
தலைகுனிந்துஉன்னைபடித்தேன்!இன்று பலர்என்னைதலைநிமிர்ந்துபார்க்கச்செய்தாய்!
Saturday, 21 March 2009
கதை கேளு, கதை கேளு!
(ஒரு வரி மட்டும் விடுபட்ட கதை)
ஒரே ஒரு ஊரிலே
யுவன் ஒருவன் இருந்தான்;
அவன் கை நிறைய சம்பாதிக்க,
விமரிசையாய் திருமணம் நடக்க,
சென்றன நாட்கள் உல்லாசமாக.
அன்பாய் இருந்தாள் அழகு மனைவி;
உயிராய் இருந்தான் அவனும் அவள் மேல்;
இல்லறம் சிறந்து குழந்தையாய் மலர,
நன்றி சொன்னான் ஆண்டவனுக்கு அடிக்கடி.
( .................. ................. ............... )
தாமதமாய் வீடு வந்தான் அவ்வப்போது;
இரவுச் சாப்பாட்டை தவிர்த்தான் வீட்டில்;
எரிந்து விழுந்தான் மனைவியிடம் அடிக்கடி;
வீடு வந்தான் சில நாட்கள் தள்ளாடியபடி.
மனைவியை அடித்தான் கோபத்தில் ஒரு நாள்;
டிமிக்கி கொடுத்தான் வேலைக்கு அவ்வப்போது;
தினமும் கிடைத்தது அடி உதை அவளுக்கு;
காணாமல் போயின ஒவ்வொன்றாய் பொருட்கள்.
வேலை போனது கவனக் குறைவால்;
ஓடிப்போனாள் மனைவியும் ஒரு நாள்;
அரசு கடையே கதி என்று கிடந்தான்;
கிழவனானான் முப்பது வயதில்;
விழுந்து கிடந்தான் தெருவில் பாதி நாள்;
விடியலில் ஒரு நாள் பேருந்தில் அரைபட்டான்;
கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது!
கதையில் விட்டுப்போன பத்தாவது வரி:
"நண்பனுடன் ஒருநாள்
Sunday, 15 March 2009
சுஜாதாவின் TEN COMMANDMENT
இது "குமுதம்" பத்திரிக்கையில் சுமார்12 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது
----------------------------------------------------------
சுஜாதாவின் 'வயது வந்தவர்களுக்கு' .... உலகில் மிகச்சுலபமான வேலை அறிவுரைப்பது. கஷ்டமான வேலை, கடைப்பிடிப்பது. திருவள்ளுவர் காலத்திருந்து தமிழில் இருக்கும் அறிவுரை நூல்களுக்கு, தமிழ்நாட்டில் இன்று ஒரு அயோக்கியன் கூட இருக்கக்கூடாது. பதினாறிலிருந்து பத்தொன்பது வயது வரைதான் இளைஞர்கள். அதன்பின் அவர்களுக்கு முதிர்ச்சியும் பிடிவாதாமும் வந்து அவர்களை மாற்றுவது கஷ்டம். பதினாறே கொஞ்சம் லேட் தான். அஞ்சு வயசிலேயே ஒரு குழந்தையின் குணாதிசயங்கள் முழுவதும் நிலைத்துவிடுகின்றன என்று மனோதத்துவர்கள் சொல்கிறார்கள். இருந்தும் பதினாறு ப்ளஸ்-யை முயற்சிப்பதில் தப்பில்லை. இந்த அறிவுரைகள் இரு பாலருக்கும் பொது(ஆண்-பெண்) இனி அவை.
1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், எதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது ஒரு நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை ரொம்ப இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.
2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். ஏழுகடல் கடந்து அசுரனின் உசிர் நிலையைக் கேட்க மாட்டார்கள். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படித்தான் இருக்கும்.
3. முன்று மணிக்குத் துவங்கும் மாட்டினி போகாதீர்கள். க்ளாஸ் கட் பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். வெளியே வந்ததும் பங்கி அடித்தாற்போல் இருக்கும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரவத்துக்கு உண்மை சொல்லி விடுவது சுலபம். மாட்டினி போகாமல் இருப்பது அதை விட. கிளர் ஓளி இளமை என்று ஆழ்வார் சொல்லும் இளமை, ஓளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.
4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களை படியுங்கள்.பொது விஷயங்கள் என்றால் கதை சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்றபேரைப் பற்றிக்கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகம் நான் ஒரு நாளைக்கு நாலு பக்கம் தான் படிக்கிறேன். அதுவே வருஷத்துக்கு ஆயிரத்து ஐந்நூறு ஆகிவிடுகிறது.
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள்.சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில். யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் முன்னூறு ரூபாய்க்கு ஸ்னீக்கர்ஸ், சுடிதார் கேட்கு முன்.
6. இந்தப் பத்திரிகையைப் படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வாரப் பத்திரிகை படிக்க வசதியில்லாத கோடிக் கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை பாத்ரூமில் அல்லது படுக்கப்போகு முன் எண்ணிப் பாருங்கள்.
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம், ( உடல்) எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயசில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம். குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்குக் கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரவமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.
8. எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். வெளி விளையாட்டு. கடியாரத்துக்கு சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள் எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாகத் தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காகச் சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். யாரையும் மனத்திலோ உடலிலோ தாக்கத் தோன்றாது.
9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிஷம். டி.வி.யில் அசட்டு நாடகங்கள் எல்லாம் ஓய்ந்து இந்தி ஆரம்பித்து அணைத்திருப்பார்கள். குழந்தைகள் தூங்கியிருக்கும். ஒரு மணி நேரமாவது சுத்தமாகப் பாடப் புத்தகம் படிக்கலாம். படித்த உடனே ஓரு முறை பார்க்காமல் எழுதிவிடுங்கள். ராத்திரி பிறர் வீட்டில் தங்கவே தங்காதீர்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் வினை.
10. படுக்கப் போகும் முன் பத்து மிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும். எதாவது ஓர் அறுவை ஜோக் அல்லது காலேஜில் இன்று நடந்தது. அல்லது நாய்க்குட்டி அல்லது எதிர்வீட்டில் காலாட்டி மாமா. சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான். நன்றி: குமுதம் & தேசிகன்
Saturday, 28 February 2009
திறந்தவெளிச் சுடுகாடாகும் ஈழத் தீவு!
ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்து, விகடனில் வந்துள்ள கட்டுரை இது. விகடனுக்கு நன்றி. இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து யாராவது வெளியிட வேண்டும். சிங்கள அரசின் அராஜகம், இன்னும் பலருக்கும் தெரிய வரும்!
**********************************************
மகான் ரஜ்னீஷ் சொன்ன கதை, மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் பொருந்தும்!
மன்னன் ஒருவனின் கனவில் மரணம் தோன்றியது. 'உன்னைக் குறித்த நேரத்தில்,குறித்த இடத்தில் சந்திப்பேன்' என்றது. அதிலிருந்து தப்பிக்க,புத்திசாலிகள் அத்தனை பேரையும் அழைத்து ஆலோசனை கேட்டான். 'இவர்கள் முடிவுக்கு வருவதற்கு முன் மரணம் வந்துவிடும்.
எனவே, உன்னிடம் வேகமாக ஓடும் குதிரையை எடுத்துக்கொண்டு ஓடிப் போய்விடு' என்று ஒரு கிழவன் ரகசியமாகச் சொன்னதும் குதிரையை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
18 மணி நேரம் ஓடியது குதிரை. 'அப்பாடா... இந்த இடத்துக்கு மரணத்தால் வர முடியாது' என்று மன்னன் பெருமூச்சுவிட்டுக் கீழே இறங்கி மரத்தடியில் உட்கார்ந்தான். தோளில் ஒரு கை விழுந்தது. 'சபாஷ்! இந்த இடத்துக்கு நீ நிச்சயம் வருவாய் என்றுதான் காத்திருக்கிறேன்' என்று பாசக் கயிற்றை வீசியதாம் மரணம்.
அந்த எமன் வீசியது பாசக் கயிறு. சிங்கள எமகாதகர்கள் வீசுவதற்குப் பெயர் பாதுகாப்பு வளையம். 'உயிருக்குப் பயந்தவர்கள் இங்கே வாருங்கள்' என்று அழைத்து, குண்டுபோட்டுக் கொல்கிறார்கள். அது பாதுகாப்பான மயானங்கள்!
எத்தனை தடவைதான் ஈழத்தின் சோகத்துக்கும் கொடூரத்துக்கும் வேறு வேறான வார்த்தைகளைத் தேட! வார்த்தைகள் தீர்ந்தாலும் வதைகள் தொடர்கின்றன. கடைசித் தமிழன் உயிரோடு இருக்கும் வரை அது தொடர்ந்து தொலைக்கத்தான் செய்யும்!
இப்போது ராணுவத்தின் இலக்கு புலிகள் அல்ல, அப்பாவித் தமிழர்கள். 'புலிகளை ஒழித்துவிட்டால், அடுத்து தமிழர்களுக்கு எதையாவது செய்தாக வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், ஒட்டுமொத்தத் தமிழர்களையும் மொத்தமாக முடித்துவிட்டு, புலிகள் பக்கம் திரும்ப சிங்கள அரசு சதித் திட்டம் தீட்டுகிறது. 'அப்பாவிகளைக் கொல்லாதே!' என்று பல்வேறு உலக நாடுகள் நெருக்கடி கொடுத்ததும், அதை மறைப்பதற்கான தந்திரத்தை மகிந்தா அரசு யோசித்தது. அவர்கள் கண்டுபிடித்தது 'பாதுகாப்பு வளையம்' என்ற வார்த்தை.
பொதுவாக போர்கள் நடக்கும்போது, மருத்துவமனைகள், மத வழிபாட்டு இடங்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் 'பாதுகாப்பான இடங்கள்' என அறிவிக்கப்படும். அங்கு குண்டுகள் வீசக் கூடாது என்பது உலக நீதி. ஆனால், எல்லா அநீதிகளையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட ராஜபக்ஷே அரசு, அதைப் 'பாது காப்பு வளையம்' என்கிறது.
'சில பகுதிகளைப் பாதுகாப்பு வளையமாக அறிவித்துள்ளோம். அங்கு பொதுமக்கள் வந்துவிட வேண்டும். இதற்கு 48 மணி நேரம் கெடு' என்று சிங்கள அரசு அறிவித்தது. அதாவது, மக்களை காட்டை விட்டு வெளியில் வரச் சொல்லி, கெடு விதித்தது. இதைத்தான் இங்குள்ள காங்கிரஸ் கட்சி, 48 மணி நேரப் போர் நிறுத்தம் என்று சொல்லிப் பெருமைப்பட்டது. இப்படி ஒரு தகவல் அறிவிக்கப்பட்டதுமே அப்போதுகொழும்பில் இருந்த ஐ.நா. அதிகாரி ஒருவர், 'தமிழர் வாழ்வதற்குப் பாதுகாப்பான இடம் என இலங்கையில் ஓர் அங்குலம்கூட இல்லையே? எங்கு வரச் சொல்கிறார்கள்?' என்று கிண்டலடித்தார்.
காட்டுக்குள் பல மாதங்களாக அடைந்துகிடக்கும் அப்பாவி மக்களில் சிலர், அரசாங்கத்தின் வார்த்தையை நம்பி, அந்தப் பாதுகாப்பான இடத்துக்கு வர, அங்கு போய் குண்டு போட்டுக் கதையை முடிக்கிறது சிங்கள அரசு.
இங்கு மக்கள் படும் சிரமங்கள் ஜெயவர்த்தனே காலத்தைவிடப் பல மடங்கு மோசமானது. ''எங்கள் மக்கள் முல்லைத் தீவுக் காட்டுப் பகுதிக்குள் மட்டும் இரண்டரை லட்சம் பேர் இருக்கிறார்கள். யாருக்கும் வீடு கிடையாது. குடிசை கிடையாது. வெறும் சாக்கு, பிளாஸ்டிக் பாய்களை வைத்து மரங்களுக்கு மத்தியில் இருக்கும் அகலத்தில் டென்ட் போட்டுத் தங்கி இருக்கிறார்கள்.
பெரும்பாலான நேரம் பதுங்கு குழிகளில்தான் எல்லாரும் இருக்கிறார்கள். காலைக் கடன்கள் கழிப்பது, சமையல் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் பதுங்கு குழியில்தான். இரவு பகலாக குழிக்குள் உட்கார்ந்திருக்கும் அவஸ்தையைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. விமானம் வரும் சத்தம்
கேட்டால், அத்தனை பேரும் பூமிக்குக் கீழே புதைந்து கிடப்பார்கள். குண்டு விழுந்தால் அப்படியே சமாதி!''
முல்லைத் தீவு மாவட்டம், தேவிபுரம், வள்ளிபுனத்திலிருந்து இடம்பெயர்ந்து அதிகாலையில் மூன்று குடும்பங்கள் வந்து சேர்ந்தன. ஐந்து மணி இருக்கும். அந்த நேரம் பார்த்து அவர்கள் மீது குண்டுகள் விழுந்தன. 19 பேர் அந்த இடத்தில் செத்துப்போனார்கள். 61 பேர் பலத்த காயமடைந்து துள்ளத் துடிக்கக்
கிடந்தனர். காயம் அடைந்தவர்களை முல்லைத் தீவு மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். மதியம் ஒரு மணிக்கு அங்கும் விழுந்தது குண்டு. காயம்பட்டு வந்தவர்கள், அங்கேயே பிணமானார்கள். இது நடந்தது கடந்த 12-ம் தேதி.
அதற்கு முந்தைய நாள் தேவிகுளம் நோக்கி நள்ளிரவு 3.15 மணிக்கு நடந்து வந்துகொண்டு இருந்த 22 பேர் குண்டுவீச்சில் செத்தார்கள். இடம்பெயர்ந்து வருபவர்கள் தாற்காலிகமாகத் தங்கியிருக்கும் கொட்டகைகள் மீதும் குண்டுகள் விழுகின்றன.காயம்பட்டவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல்கள் தொடர்கின்றன. புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை மீது கடந்த 6-ம் தேதி விழுந்த குண்டுவீச்சில் 61 பேர் இறந்துபோனார்கள். 'ஆஸ்பத்திரிக்குப் போனா, சாவுதான்' என்பது தமிழகத்தில் ஜோக். ஈழத்தில் அதுதான் கடைசி ஷாக்!
மருத்துவமனைகளுக்கும் எந்த மருந்தையும் கடந்த ஆறு மாதமாக வரவிடவில்லை. வந்தவை அனைத்தும் காலியாகி, வெறும் பேண்டேஜ்கள் மட்டும் வைத்து, வாசலில் பாய் விரித்துப் படுக்கவைத்துவிடுகிறார்கள். வலியால் துடிப்பவர்களைப் பார்த்து டாக்டர்கள், நர்ஸ்கள் அதிர்ச்சி அடைவதில்லை. அவர்களிடம் வேறு வழியும் இல்லை. முல்லைத் தீவு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 8 மருத்துவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களை அங்கிருந்து வெளியேற கொழும்புவில் இருந்து உத்தரவு. இனி சும்மா படுக்கவைத்து கட்டுப் போடக்கூட ஆள் இருக்க மாட்டார்கள். இப்படி எல்லா மருத்துவமனைகளும் அறிவிக்கப்படாத சுடுகாடுகளாக மாறிவிட்டன.
மிக அதிக பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கப்பல் மூலம் வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்குக் கொண்டுபோக செஞ்சிலுவைச் சங்கம் முயற்சி எடுத்தது. முல்லைத் தீவு மாத்தளன் கடலில் இந்தக் கப்பலை ஒரு மணி நேரத்துக்கு மேல் நிறுத்த கடற்படை அனுமதிக்கவில்லையாம். சுமார் 240 பேர் மட்டும் அவசர அவசரமாக கப்பலில் ஏற்றப்பட்டார்கள். மற்றவர்கள் நொந்துபோய் அங்குள்ள மருத்துவமனையிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இதோடு செஞ்சிலுவைச் சங்கமும் வெளியேறிவிட்டது.
இன்னொரு பக்கம் பார்த்தால்....
உயிருடன் பாதுகாப்பு வளையத்துக்குள் வருபவர்கள் தனித் தனியாகப் பிரித்து அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதில் முதியோர்கள், குழந்தைகள் வேறு பக்கமும் இளைஞர்கள், இளம் பெண்கள் தனியாகவும் அனுப்பப்படுகிறார்கள். சோறு, தண்ணீர் இல்லாத இடங்களில் முதியோர்கள் அவஸ்தைப்பட... இளைஞர்கள், இளம் பெண்களுக்கான சித்ரவதை இன்னொரு புறம் ஆரம்பமாகிறது.
விசாரிக்கப்போவதாக ராணுவப் புலனாய்வு அதிகாரிகள் வருவார்கள். ''இளைஞர்களை முடிந்த வரை கொடுமைப்படுத்திவிட்டுச் சுட்டுவிடுவது இவர்களின் வேலை. வேறு எதுவும் விசாரணை செய்வதில்லை. பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள், கோரங்களின் உச்சம். இளம்பெண்களின் கண்களை முதலில் கட்டுவார்கள். கைகளைப் பின்புறம் சேர்த்துக் கட்டுவார்கள். அதன் பிறகு அவர்களின் ஆடைகளைக் கிழித்து அம்மணமாக்கிவிட்டு, உதைத்து ஓடவிடுகிறார்கள். எங்கு போகிறோம்... என்ன நடக்கப் போகிறது என்றே தெரியாமல், பயத்தில் ஒரு பெண் ஓட, வாய்ப்பான வசதியான இடங்களில் சிங்கள மிருகங்கள் தங்கள் பாலியல் கொடுமைகளை அரங்கேற்றும். எத்தனையோ பேர் அவள் மீது விழுந்து புரண்ட பிறகு, அவள் உறுப்புகளைச் சிதைத்து சுட்டுக் கொன்றுவிடுவதுதான் அங்கு நடக்கிறது'' என்று சொல்லப்படும் தகவல்களைக் கேட்கவே நெஞ்சு நடுங்குகிறது.
அனுராதபுரம், பொலநறுவை மயானங்கள், அதை ஒட்டிய காட்டுப் பகுதிகள், வவுனியாவின் ஆள் நடமாட்டமில்லாத இடங்களில்தான் இந்தக் கொடூரக் கற்பழிப்புகள் அதிகம் நடக்கின்றனவாம். அனுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு வேலைக்குப் போன சிங்களத் தொழிலாளர்கள், தங்கள் பகுதிகளில் பல பெண்களின் பிணங்கள் நிர்வாணமாகக் கிடந்ததாக வெளியில் சொன்னார்கள். வன்னியில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாறிக்கொள்ள வவுனியாவுக்கு அடைக்கலம் புகும் மக்களைக் காப்பாற்றுங்கள் என்பதுதான் இப்போதைய ஈழமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
புலிகள் வசம் இருக்கும் புதுக் குடியிருப்பையும், அதைத் தாண்டிய முல்லைத் தீவையும் கைப்பற்றி ஏக இலங்கையை பிப்ரவரி முதல் நாள் விடுதலை செய்யப்போவதாக அறிவித்த மகிந்தா ராஜபக்ஷே அரசு, இரண்டு வாரங்களைக் கடந்த பிறகும் அந்தச் செய்தியை அறிவிக்காமல் மக்களைக் கொல்வதில் அக்கறையுடன் இயங்கி வருகிறது. இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடை யவர்கள் என்று சிங்களக் கட்சிகள் சொல்ல ஆரம்பித்துள்ளன. ஜனதா விமுக்தி பெரமுனா அமைப்பு, 'தமிழர்கள் யாரையும் விடக் கூடாது' என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்குக் காத்திருந்தது மாதிரி, கோத்தபய ராஜபக்ஷே ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
''புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் வர வேண்டும். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதா, இல்லையா என்று நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. புலிகள் தங்கள் வசமிருந்த மக்கள் அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி கொடுத்துள்ளார்கள். எனவே, அனைவரும்
புலிகள்தான். ஒரு குடும்பத்தில் யாரோ ஒருவர் இறந்த மாவீரராகவோ அல்லது இப்போது அமைப்பில் இருக்கும் போராளியாகவோ உள்ளார்கள். எனவே, எந்தக் குடும்பமும் எங்களுக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல முடியாது. மருத்துவமனைகளைத் தாக்குவதாகச் சொல்கிறார்கள். அதுவும் எங்களின் ராணுவ இலக்குதான்'' என்று தெளிவாக அறிவித்துவிட்டார் கோத்தபய ராஜபக்ஷே.
''இன்னும் ஐந்து மாத காலத்துக்கு நித்தமும் இந்த தாக்குதலைத் தொடர சிங்கள
தரப்பு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்புறம் மயானக் கரைக்கு வெள்ளையடித்து ரிப்பன் கட் பண்ணப்போகிறதா ஐ.நா.சபையும் உலக சமுதாயமும்?'' என்று ஈழ மக்கள் கதறுகிறார்கள்.
அது பற்றி நமக்கென்ன கவலை?
நமக்கு இலங்கையை கிரிக்கெட்டில் ஜெயித்தது போதும்தானே!.